முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து 8 முறை எம்.எல்.ஏ.: 9-வது வெற்றியை தவறவிட்ட மகாராஷ்டிரா காங். தலைவர்

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      இந்தியா
Cong 2024-11-24

Source: provided

மும்பை : 8 முறை தொடர் வெற்றி பெற்ற மராட்டிய காங். தலைவர் . 9-வது முறை சிவசேனா வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி தோல்வியடைந்தது.

தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர்களில் அக்கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.வும், சட்டமன்ற கட்சி தலைவருமான பாலாசாகேப் தோரட்டும் (வயது 71) ஒருவர். சங்கம்னர் தொகுதியில் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்ற தோரட், இந்த முறை சிவசேனா (ஷிண்டே அணி) வேட்பாளர் அமோல் காட்டலிடம் 10,560 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

1985-ம் ஆண்டு சங்கம்னர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் பாலாசாகேப் தோரட். அதன்பின்னர் அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்ற இவர், கட்சியின் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கினார்.

கடந்த முறை இவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது. அப்போது காங்கிரஸ் கட்சி 44 இடங்களை வென்றிருந்தது. அதன்பின், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தோரட். அசோக் சவான் தலைவராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் காரியக் கமிட்டியின் நிரந்தர அழைப்பாளரான தோரட், 1999 முதல் 2014 வரை அமைச்சராக இருந்தார். பின்னர் மகா விகாஸ் அகாடி ஆட்சியிலும் அமைச்சராக பணியாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 hours ago
View all comments

வாசகர் கருத்து