முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் எதிர்பாராத ஒரு வெற்றியை பா.ஜ.க. பெற்றுள்ளது : வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      தமிழகம்
Thirumavalavan-1 2024-06-21

Source: provided

சென்னை : மராட்டியத்தில் பா.ஜ.க.வே எதிர்பாராத ஒரு வெற்றியை பெற்றுள்ளது என்று தெரிவித்த திருமாவளவன், பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள பிரியங்கா காந்திக்கும், ஜார்கண்ட் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள ஹேமந்த் சோரனுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாடாளுமன்ற மக்களவைக்கு பிரியங்கா காந்தி வரப்போவது இந்தியா கூட்டணிக்கு மேலும் வலிமையைத் தரும். அதைபோல ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மீது பொய் வழக்குகளைப் போட்டு மத்திய பா.ஜ.க. அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. குறுக்கு வழியில் அவரது முதல்-மந்திரி பதவியைப் பறித்தது. இந்தச் சதிகளையெல்லாம் தாண்டி மக்கள் ஆதரவோடு ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறார்.

மராட்டிய மாநிலத்தில் தலித் வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. தலித் வாக்குகள் இந்தியா கூட்டணிக்குச் செல்லாமல் சிதறடிக்கும் விதமாக எல்லா தொகுதிகளிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வி.பி.ஏ. கூட்டணியும் வேட்பாளர்களை நிறுத்தின. பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இரண்டையும் எதிர்ப்பதாக அவர்கள் சொல்லிக் கொண்டாலும் "பா.ஜ.க.வுக்கு ஆதரவாகத் தலித் வாக்குகளைப் பிரிப்பதற்குத்தான் அவர்கள் வேட்பாளர்களை நிறுத்தினார்கள்" என்னும் விமர்சனம் பரவலாக உள்ளது. இது அறிந்தோ அறியாமலோ பா.ஜ.க.வுக்குத் துணைபோகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மராட்டியத்தில் பா.ஜ.க.வே எதிர்பாராத ஒரு வெற்றியை அது பெற்றுள்ளது. இந்த வெற்றி மோடி -அமித்ஷா- அதானி கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி என உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 hours ago
View all comments

வாசகர் கருத்து