முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா தேர்தல் முடிவால் உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      இந்தியா
Stock-Market 2024-11-25

Source: provided

 

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவால் மும்பை பங்குச்சந்தை புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது.

தீபாவளி பண்டிகை, அமெரிக்க அதிபர் தேர்தல், அதானி மீது அமெரிக்க குற்றச்சாட்டு ஆகியவற்றின் காரணமாக கடந்த வாரம் வியாழக்கிழமை வரை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது. கடந்த 21-ந்தேதி (வியாழக்கிழமை) 0.54 சதவீதம் குறைந்த மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 77,155 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. 

கடந்த வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை சுமார் 1,961 சென்செக்ஸ் புள்ளிகள் (2.54 சதவீதம்) உயர்ந்து மும்பை பங்குச்சந்தை 79117.11 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. நேற்று காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,076 புள்ளிகள் உயர்ந்து 80193.47 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. நேற்று காலை அதிகபட்சமாக செக்செக்ஸ் 80452.94 புள்ளிகளில் வர்த்தகமானது.  

அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையிலும், மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் இரண்டு நாட்களாக பங்கு சந்தை உயர்ந்து காணப்படுவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்களில் சுமார் சென்செக்ஸ் சுமார் 3,200 புள்ளிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. லார்சன், எம் அண்டு எம், ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து