முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      தமிழகம்
CM-1-2024-11-28

சென்னை, இளங்கோவனின் உடல்நிலை குறித்து டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டார்.

75 வயதாகும் அவருக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று டாக்டர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். முன்னதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். 

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்தாண்டு காலமானார். இதையடுத்து, நடைபெற்ற இடைத்தேர்தலில் திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து