முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரி உயர்வை தி.மு.க. அரசு திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

சென்னை, உயர்த்தப்பட்ட வரிகளை தி.மு.க. அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் வரி, குப்பை வரி உயர்வு மட்டுமன்றி, ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு;. இவற்றை கட்டவில்லை எனில் அபராத வரி மற்றும் வாடகை கட்டிடங்களுக்கு புதிதாக ஜி.எஸ்.டி. வரி என கடுமையான வரி உயர்வுகளை பொதுமக்கள் தலையில் சுமத்தும்  தி.மு.க அரசைக் கண்டித்து மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்து தி.மு.க. மேயர், அனைத்து தீர்மானங்களையும் ஜனநாயக விரோதமாக நிறைவேற்றி கூட்டத்தை முடித்திருப்பது கண்டனத்திற்குரியது.

திருப்பூர் மாநகராட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து ஜனநாயக முறையில் கழக கவுன்சிலர்கள் நடத்திய போராட்டத்தை காவல்துறையை ஏவி கைது நடவடிக்கையில் ஈடுபட்ட தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம். உயர்த்தப்பட்ட வரிகளைத்  திரும்பப் பெறவும்  தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் .  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து