முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      இந்தியா
Ashwini-Vaishnav 1

புது டெல்லி, மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற மக்களவையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் சுதிர் குப்தா மற்றும் அனந்த நாயக் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ரயில்வே துறை அதிவேக ரயில்களை தயாரித்து வருகிறது. 

இந்த ரயில்களை சென்னையில் உள்ள ஐ.சி.எப், பி.இ.எம்.எல். நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்து தயாரித்து வருகிறது. இது மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரு ரயில் தயாரிக்க சுமார் ரூ.28 கோடி (வரி தவிர) செலவாகும்.

இருக்கை வசதிகளை மட்டுமே கொண்ட இந்த ரயில் பெட்டிகளில் ஏரோடைனமிக் வெளிப்புறம், தானியங்கி கதவுகள், சிசிடிவி, செல்போன் சார்ஜிங் வசதி, தீ பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இருக்கும். இந்த ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து