முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலில் சிக்கி தவித்த 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      தமிழகம்
Fisher-Boat

Source: provided

கடலூர்: கடலூரில் கடலில் தவித்துவந்த 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடலூர் தைகால் தோணித்துறை பகுதியை சேர்ந்த சகாதேவன் மகன் மணிக்கண்ணன்(35), முருகன் மகன் தமிழ்(37), சந்திரன் மகன் சாமிதுரை(63), ஆடியபாதம் மகன் மணிமாறன்(30), ரமேஷ் மகன் தினேஷ்(29), கந்தசாமி மகன் சற்குணன்(23) ஆகியோர் சென்ற இரண்டு படகுகள் கடல் சீற்றம், காற்றின் வேகம் காரணமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதனையடுத்து கடலில் தத்தளித்த மீனவர்கள் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான கப்பல் இறங்கு தளத்திற்கு நீந்தி சென்று உயர் தப்பினர். உயிர் தப்பிய 6 மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கரை திரும்புவதில் சிக்கல் நீடித்தது.

இந்தநிலையில் இது குறித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த கடலோர காவல்படை கப்பல் இறங்கு தளத்தில் சிக்கிய மீனவர்கள் ஒவ்வொருவராக ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட மீனவர்கள் பத்திரமாக கரையில் இறக்கிவிடப்பட்டனர். கடலில் இருந்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் ஆறு பேரும் பத்திரமாக வந்ததில் மகிழ்ச்சி தெரிவித்தனர். இனி அரசு, மீன்வளத்துறை எச்சரிக்கையை உதாசீனப்படுத்த மாட்டோம் என மீனவர்கள் உறுதி அளித்தனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கையை மீறி சென்றதால் இந்த விபத்து நேரிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து