முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள்: சபரிமலையில் 9 நாட்களில் 6 லட்சம் பேர் சாமி தரிசனம்

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      இந்தியா
Sabarimala 2024-11-5

Source: provided

 

திருவனந்தபுரம்நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்களால் சபரிமலையில் கடந்த 9 நாட்களில் 6 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகமாகும்.

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. மறுநாள் முதல் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலமும், உடனடி தரிசன முன்பதிவு மூலமும் அய்யப்பனை தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த 9 நாட்களில், 6 லட்சத்து 12 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைவர் பிரசாந்த், "சபரிமலையில் மண்டல சீசனை முன்னிட்டு நடை திறக்கப்பட்ட 9 நாட்களில் சாமி தரிசனத்திற்கு 6 லட்சத்து 12 ஆயிரத்து 294 பேர் வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகமாகும். 23-ந் தேதி வரை காணிக்கை, அப்பம், அரவணை விற்பனை உள்பட மொத்த வருமானமாக ரூ.41 கோடியே 64 லட்சத்து 65 கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.13 கோடியே 13 லட்சம் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. பம்பை, எருமேலி, வண்டிப்பெரியார் ஆகிய ஸ்பாட் புக்கிங் மையங்களில் பக்தர்கள் ஆதார் அடையாள அட்டையை மட்டும் கொண்டு முன்பதிவு செய்து தரிசிக்க வசதி செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து