முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களை அவமதிக்கிறவர்கள் ஒருபோதும் வென்றது கிடையாது உத்தவ் தாக்ரே தோல்வி குறித்து கங்கனா கருத்து

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      இந்தியா
Kangana-Rao 2024-11-25

Source: provided

 

மும்பை: பெண்களை அவமதிக்கிறவர்கள் ஒருபோதும் வெல்ல முடியாது என்று உத்தவ் தாக்ரே தோல்வி குறித்து பா.ஜ.க. எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு எம்.பி. ஆனவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். பொதுவெளியில் அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களை கண்டனத்துக்கு உள்ளாகும் எம்.பி. கங்கனா பாஜக அரசின் புதிய வேளாண் கொள்கைகளை எதிர்த்துப் போராடிய பஞ்சாப், அரியானா விவசாயிகளைப் பயங்கரவாதி என கூறி சர்ச்சை செய்தார். 

இதற்காக அரியானா விமான நிலையத்தில் வைத்து சிஎஸ்ஐஎப் பெண் அதிகாரி குல்விந்தர் கவுர் என்ற பெண்ணிடம் கங்கானா கன்னத்தில் அரை வாங்கிய சம்பவமும் நிகழ்ந்தது. இந்நிலையில் நடந்து முடித்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைந்த இன்டியா கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குறித்து கங்கனா காட்டமான கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார். 

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா, உத்தவ் தாக்கரேவின் மோசமான தோல்வி நான் எதிர்பார்ததுதான்,பெண்களை மதிக்கிறார்களா அல்லது அவர்களின் நலனுக்காக பாடுபடுகிறார்களா என்பதைப் பொறுத்தே ஒருவரை கடவுள் என்றும் அரக்கன் என்றும் அடையாளம் காண முடியும். பெண்களை இழிவு செய்யும் அரக்கன் உத்தவ் தாக்கரே. சாத்தானுக்கு நேர்ந்த அதே முடிவை அவர் சந்தித்துள்ளார். பெண்களை அவமதிக்கின்றவர்கள் ஒருபோதும் வெல்ல முடியாது. எனது வீட்டை இடித்து என்னை வார்த்தைகளால் பழித்தவர்கள் அவர்கள். வளர்ச்சிக்கு வாக்களித்த மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி, பிரதமர் மோடி மகத்தான தலைவர் என்று தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து