முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவறு இருந்தால் இசைவாணி மீது சட்டப்படி நடவடிக்கை அமைச்சர் சேகர்பாபு தகவல்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      தமிழகம்
Isaivani 2024-1126

Source: provided

 

சென்னை: இசைவாணி மீது தவறு இருந்தால் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சபரிமலை அய்ப்பனை இழிவுபடுத்தும் வகையில் கானா பாடல் பாடிய பாடகி இசைவாணி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா..? என்று அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த அவர், "எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார். எந்த மதத்தினரும் பிற மதத்தினரை இழிவுப்படுத்துவதை முதல்வர் அனுமதிக்க மாட்டார். இசைவாணி மீது புகார் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதை பத்திரிகை வாயிலாக அறிந்தேன். இது குறித்து நிச்சயம் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தவறு இருப்பின், உறுதியாக இந்த ஆட்சி நடவடிக்கை எடுக்கும். மதத்தால், இனத்தால், மக்களை பிளவுபடுத்துகின்ற சக்திகள் இந்த ஆட்சியில் தலைதூக்க கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்" என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து