முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திடீர் உடல் நலக்குறைவு: ரிசர்வ் வங்கி கவர்னர் நலமுடன் உள்ளார்: மருத்துவமனை தகவல்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      தமிழகம்
RBI 2024-11-26

Source: provided

 

சென்னை: திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி கவர்னர் தற்போது நலமுடன் உள்ளதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ். சென்னை வந்திருந்த இவர், ரிசர்வ் வங்கி குடியிருப்பில் தங்கி இருந்தார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தற்போது நலமுடன் உள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அசிடிட்டி காரணமாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமுடன் உள்ளார். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் ." என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து