முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் கனமழை எச்சரிக்கை: ஆறு மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      தமிழகம்
CM-1-2024-11-26

சென்னை, தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, தாழ்வான பகுதியில் இருந்து பொது மக்களை நிவாரண முகாம்களுக்கு முன்கூட்டியே மாற்றுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தென்கிழக்கு வங்கக்கடல் உருவான காற்றழுத்த மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ள 'பெங்கல்' என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும், சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் எனவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காணொலி வாயிலாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களிடம் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மேலும் கனமழையின்போது பொதுமக்களை தாழ்வான பகுதிகளில் இருந்து முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், மின்சார வசதி தடையின்றி கிடைக்கவும், வெள்ள நீர் தேங்கி பயிர்கள் சேதமடையாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து