முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா சட்டசபையில் அமளி

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      இந்தியா
Odisha-Assembly 2024-08-23

புவனேஸ்வர், ஒடிசா சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

ஒடிசா மாநில சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி டிசம்பர் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. ஒடிசாவின் முதல்வரும், நிதித்துறை மந்திரியுமான மோகன் சரண் மாஜி நேற்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக நேற்று கூட்டத்தொடர் தொடங்கிய பின்னர், மறைந்த 6 முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அவை நடவடிக்கைகள் தொடங்கியபோது, ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள மண்டிபங்கா கிராமத்தில், உணவு தட்டுப்பாடு காரணமாக மாம்பழ விதையில் இருந்து எடுக்கப்படும் கூழை சாப்பிட்டு 3 பழங்குடியின பெண்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். மாநில பா.ஜ.க. அரசு பொது உணவு விநியோக திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை என்று கூறி எதிர்க்கட்சி பி.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனர். இது தொடர்பாக முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையிலான அரசுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை கூட்டத்தொடர் முதல் நாளிலேயே ஒருமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து