எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சை: தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்த தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மழையால் 33 சதவீதம் நெற்பயிர்கள் பாதிப்பு இருந்தால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் மழை பெய்தது. தொடர் மழையால் இளம் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் உக்கடை பகுதியில் மழையால் மூழ்கி சேதமடைந்துள்ள நெற்பயிர்களை வியாழக்கிழமை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் மழையால் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை எடுத்து அமைச்சர்களிடம் காண்பித்து சேதமடைந்த பயிர்களை கணக்கீட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது., தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழையால் 13 ஆயிரத்து 749 ஹெக்டேர் அளவில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 947 ஹெக்டேர் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் 3300 ஹெக்டேரும், நாகை மாவட்டத்தில் 7681 ஹெக்டேரும், திருவாரூர் மாவட்டத்தில் 958 ஹெக்டேர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 822 ஹெக்டேர் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 ஹெக்டேர் அளவிற்கு கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன.
முதல் கட்ட கணக்கீட்டில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளது. தண்ணீர் வடியாததால் பயிர்கள் மூழ்கியுள்ளது . தற்போது வேளாண் துறை அதிகாரிகள், துறை அதிகாரிகள் மூழ்கி சேதமடைந்துள்ள பயிர்களின் விவரங்களை கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .33 சதவீதம் அளவுக்கு பயிர்களின் பாதிப்பு இருந்தால் அதற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
அதிகமாக மழை பெய்தால் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் , துறை அதிகாரிகள் என அனைத்து துறை அதிகாரிகளையும் பாதிப்பு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். இதுதவிர அந்தந்த மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தான் வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் யாரும் செய்யாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தான் ‘சி’ அண்ட் ‘டி’ வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. அதுவும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கோடை காலத்தில் தூர்வாரப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிக்கு பட்ஜெட்டிற்கு முன்பே அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மட்டும் ரூ.75 கோடி அளவுக்கு தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது, என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 4 weeks ago |
-
உக்ரைன் முழுவதும் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா: மின் உற்பத்தியை முடக்க திட்டமா?
28 Nov 2024கீவ், உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தலாம் என அமெரிக்கா அனுமதி வழங்கியதையடுத்து ரஷ்யா தனது தாக்குதலை விரிவுபடுத்தி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-11-2024.
28 Nov 2024 -
இஸ்ரேல் -ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்: வீடு திரும்பும் தெற்கு லெபனான் மக்கள்
28 Nov 2024பெய்ரூட், லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.
-
டிரம்புடன் மெட்டா நிறுவன சி.இ.ஓ. ஜூகர்பெர்க் சந்திப்பு
28 Nov 2024புளோரிடா, அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் டிரம்ப்பை மெட்டா நிறுவன சி.இ.ஓ. மார்க் ஜூகர்பெர்க் புளோரிடாவில் சந்தித்துள்ளார்.
-
வரி உயர்வை தி.மு.க. அரசு திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
28 Nov 2024சென்னை, உயர்த்தப்பட்ட வரிகளை தி.மு.க. அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானைக்கு சிறப்பு பூஜை தங்குமிடத்தை விட்டு வெளியே வந்தது
28 Nov 2024திருச்செந்தூர், திருச்செந்தூரில் கோவில் யானை தாக்கி பாகன் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று காலை திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சிறப்
-
டிரம்ப் நியமித்த அமைச்சர்களுக்கு பைப் வெடிகுண்டு மிரட்டல் அமெரிக்காவில் பரபரப்பு
28 Nov 2024வாஷிங்டன், டிரம்ப் மந்திரி சபையில் இடம்பெற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து பைப் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து எப்.பி.ஐ.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்தது
28 Nov 2024சேலம், நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.07 அடியாக உயர்ந்துள்ளது.
-
மழையால் 33 சதவீத நெற்பயிர்கள் பாதிப்பு இருந்தால் உரிய இழப்பீடு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
28 Nov 2024தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது.
-
இலங்கையில் பெய்து வரும் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
28 Nov 2024கொழும்பு, இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகி வரும் டென்மார்க்: விழாக்கோலம் பூண்டது கோபன்ஹேகன் பூங்கா
28 Nov 2024கோபன்ஹேகன், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டென்மார்கில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்கா விழாக்கோலம் பூண்டுள்ளது.
-
மராட்டியத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி
28 Nov 2024மும்பை, மராட்டிய மாநிலத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள்.
-
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: பாராளுமன்ற இரு அவைகளும் 3-வது நாளாக ஒத்திவைப்பு
28 Nov 2024புது டெல்லி, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் நேற்று 3-வது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
-
மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
28 Nov 2024புது டெல்லி, மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் வெடித்த மர்ம பொருள்: ஒருவர் காயம்
28 Nov 2024புது டெல்லி, டெல்லியின் ரோகினியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள பி.வி.ஆர்.
-
மக்களவையில் வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா
28 Nov 2024புது டெல்லி, மக்களவையில் வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
நமது ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது 30 மடங்கு அதிகரித்துள்ளது: வெலிங்டன் விழாவில் ஜனாதிபதி முர்மு பெருமிதம்
28 Nov 2024ஊட்டி, நமது ராணுவ தளவாட ஏற்றுமதி, 10 ஆண்டுக்கு முன் இருந்ததை காட்டிலும் தற்போது 30 மடங்கு அதிகரித்துள்ளது என்று வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லுாரியில் நடந்த விழாவில்,
-
வக்பு வாரிய கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
28 Nov 2024புது டெல்லி, வக்பு வாரிய கமிட்டியின் அறிக்கையை சமர்ப்பிக்க அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
-
சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Nov 2024சென்னை, புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு ரூ.
-
விஸ்வகர்மா திட்டம்: முதல்வரின் அறிவிப்புக்கு தமிழிசை கண்டனம்
28 Nov 2024சென்னை, விஸ்வகர்மா திட்டம் குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் முடிவுக்கு பா.ஜ.க.வை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தாமதமாகும் 'பெங்கல் புயல்': நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும்
28 Nov 2024சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அது புயலாக மாற தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ள
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்
28 Nov 2024சென்னை, இளங்கோவனின் உடல்நிலை குறித்து டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
-
முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு ஜனவரி 25-ம் தேதி நடைபெறும் : அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு
28 Nov 2024சென்னை, அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு ஜனவரி 25-ம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு வெளிய
-
வலுவான புயலாக மாற வாய்ப்பில்லை: நாளை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் 6 மாவட்டங்களுக்கு இன்று 'ரெட் அலர்ட்'
28 Nov 2024சென்னை: வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலைக்குள் தற்காலிகமாக புயலாக வலுப்பெறக்கூடும்.
-
மாநாட்டின் போது விபத்து: உயிரிழந்த 6 பேர் குடும்பத்தினருக்கு த.வெ.க. தலைவர் விஜய் நிதியுதவி
28 Nov 2024சென்னை: த.வெ.க. மாநாட்டின்போது விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் தலா ரூ.2 லட்சிம் நிதியுதவி அறிவித்துள்ளார்.