முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2026 சட்டமன்றத் தேர்தல் சரித்திர தேர்தலாக இருக்கும் : தமிழகம் திரும்பிய அண்ணாமலை பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2024      தமிழகம்
Annamalai 2024 11 20

Source: provided

சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தல் சரித்திர தேர்தலாக இருக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சர்வதேச அரசியல் என்ற தலைப்பிலான படிப்பை பயில, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தேர்வானார். இதற்காக, கடந்த ஆகஸ்டு மாதம் 28-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம், அண்ணாமலை இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். 

சர்வதேச அரசியல் படிப்பை பயின்று வந்த அதே காலக்கட்டத்தில், லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொண்டார். மேலும் அங்குள்ள தமிழக மாணவர்களை சந்தித்து, அண்ணாமலை கலந்துரையாடினார்.

இந்த நிலையில், சர்வதேச அரசியல் படிப்பை முடித்து விட்டு நேற்று முன்தினம் 30-ம் தேதி இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு நேற்று  அவர் தமிழகம் வந்தடைந்தார்.  சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலைக்கு பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, 

அரசியல் படிப்பு தொடர்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் முன்னாள் பிரதமர்கள் பாடம் எடுத்தார்கள். 3 மாத காலம் எனக்கு கிடைத்த பாக்கியம். கடந்த 3 மாதங்களில் பா.ஜ.க. உறுப்பினர்கள் சேர்க்கை வெற்றிகரமாக நடந்துள்ளது. 

உறுப்பினர் சேர்கைக்கு உழைத்த எச்.ராஜா உள்பட மூத்த தலைவர்களுக்கு நன்றி. தமிழக பா.ஜ.க.வில் கிளைத் தலைவர் முதல் மாநில தலைவர் வரை தேர்தல் நடக்கிறது. 3 மாதங்களில் தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. 

2026 சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ.க. தயாராகி வருகிறது.  அரசியலுக்கு வந்துள்ள நடிகை விஜய்யை வரவேற்கிறேன். விஜய்யின் அரசியல் வருகை மக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திராவிட சிந்தாந்தத்தையே விஜய் பேசுகிறார். புதிதாக ஒன்றும் இல்லை. 

அக்டோபர் மாதத்திற்கு பிறகு விஜய் எத்தனை முறை வெளியே வந்துள்ளார். தமிழகத்தில் திராவிட கட்சிகள் மூன்றாக பிரிந்துள்ளன. திராவிட கட்சிகளின் கொள்கையைத் தான் விஜயும் பேசுகிறார்.

பா.ஜ.க.வை பொறுத்தவரை புதிய கட்சிகளுக்கு பயப்படாது. எங்கே விமர்சிக்க வேண்டுமோ, அங்கே விமர்சிப்போம். 2026 சட்டமன்றத் தேர்தல் சரித்திர தேர்தலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து