முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை எட்டியது

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2024      தமிழகம்
Chembarambakkam 2023 06 20

Source: provided

சென்னை : நீர்வரத்து அதிகரிப்பை தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் எவ்வாறு கண்காணித்து வருகின்றனர்.

பெஞ்சல் புயல் தாக்கத்தின் காரணமாக பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று முன்தினம் காலை முதலே நீர் வரத்தானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. நேற்று முன்தினம் மாலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 19.47அடியும் மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 474 மில்லியன் கன அடியும், நீர்வரத்து 5 ஆயிரத்து 356 கன அடியாக இருந்தது. 

வினாடிக்கு வினாடி செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதன் காரணமாக நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 20 அடியை எட்டி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

மழைவிட்டாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் எவ்வாறு கண்காணித்து வருகின்றனர் என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து