முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியா, தாய்லாந்தில் மழை,வெள்ளத்திற்கு 30 பேர் உயிரிழப்பு

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      உலகம்
Malasiya 2024-12-04

Source: provided

கோலாலம்பூர்: மலேசியா மற்றும் தாய்லாந்தில் பெய்த மழை வெள்ளத்திற்கு இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 

மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் பெய்த மழையை விட அதிக அளவு மழை கடந்த 5 நாட்களில் கொட்டித் தீர்த்துள்ளது. 

கனமழை காரணமாக மலேசியாவின் கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள பல்வேறு இடங்களில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கனமழையால் மலேசியாவின் உள்கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய சுமார் ஒரு பில்லியன் ரிங்கிட்(224 மில்லியன் டாலர்) செலவாகும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்பு படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதே போல் தெற்கு தாய்லாந்திலும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 

சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்ட 491 நிவாரண முகாம்களில் சுமார் 34 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது மழைப்பொழிவு சற்று குறைந்துள்ள நிலையில், பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வருகிறது. ஆனால் அடுத்த ஓரிரு நாட்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து