முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      தமிழகம்
Ooty-train-2023-12-14

Source: provided

குன்னூர் : ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழும் அபாயம் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரெயில் சேவை 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.

பெஞ்சல் புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் ஊட்டிகுன்னூர் மற்றும் குன்னூர்மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழும் அபாயம் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரெயில் சேவை 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து மலை ரெயில்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு தண்டவாள பராமரிப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் குன்னூர் ரெயில் நிலையம் முன்பு உள்ள தண்டவாளத்தில் பழைய மரக்கட்டைகளை அகற்றி புதிய கட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்தநிலையில் மழை காரணமாக 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் குன்னூர் - ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையத்திற்கு இடையிலான ஊட்டி மலை ரெயில் சேவை நேற்று (4.12.2024) மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து