முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா கவர்னருடன் சந்திப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரினார் பட்னாவிஸ்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      இந்தியா
Phadnavis 2024-12-04

மும்பை, மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து தேவேந்திர பட்னாவிஸ் உரிமை கோரினார்.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியை கண்டபோதிலும், ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வந்தது. கூட்டணியில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதால் முதல்வர் பதவியேற்க பா.ஜ.க. விரும்பியது.

அதே நேரத்தில் முதல்வர் ஷிண்டேயின் முகத்தை முன்வைத்தே தேர்தலை சந்தித்ததாகவும், இதனால் அவர் முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று சிவசேனாவினர் விரும்பினர். ஆனால் இதனை எற்க பா.ஜ.க. மறுத்தது. அதன்பிறகு நடத்திய பேச்சுவார்த்தையில் முதல்வர் பதவியை பா.ஜ.க.வுக்கு வழங்க தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. முதல்வர் பதவியை தங்களுக்கு தராவிட்டால், உள்துறை, நிதி இலாகாக்கள் மற்றும் சபாநாயகர் பதவியை தங்களது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி இருந்தது.

இதனிடையே புதிய அரசு பதவியேற்பு விழா இன்று நடைபெறும் என்று பா.ஜ.க. அறிவித்திருந்தது. நேற்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தின் அடுத்த முதல்வர்யாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்க பா.ஜ.க. மத்திய குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க தேவேந்திர பட்னாவிஸ் உரிமை கோரினார். அவருடன் சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் கவர்னரை சந்தித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து