முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      விளையாட்டு
Sri-Lanka 2024-07-08

Source: provided

இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும், இதில் கடந்த 27ம் தேதி தொடங்கிய முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 233 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் , இரு அணிகளுக்கும் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது . இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற தென் ஆப்பிரிக்க அணி முனைப்பு காட்டும் அதேவேளை இந்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் நோக்கில் இலங்கை விளையாடும். 

___________________________________________________________________________

வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததும் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒருநாள் போட்டிகள் முறையே டிசம்பர் 8, 10, 12ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதையடுத்து வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷாய் ப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரண்டன் கிங் துணை கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்; ஷாய் ஹோப் (கேப்டன்), பிரண்டன் கிங் (துணை கேப்டன்), கேசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்டு, ஜஸ்டின் க்ரீவஸ், ஷிம்ரன் ஹெட்மையர், அமிர் ஜாங்ஹோ, அல்ஜாரி ஜோசப், ஷமர் ஜோசப், எவின் லூயிஸ், குடகேஷ் மோடி, ஷென்பேன் ரூதர்போர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்.

___________________________________________________________________________

பார்வையற்றோர் உலகக்கோப்பை கிரிக்கெட்

பார்வையற்றோருக்கான முதலாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) இந்தியாவில் நடைபெறுகிறது. சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த ஆண்களுக்கான பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து பாதுகாப்பு பிரச்சினையால் இந்திய அணி விலகியது. 

இதனால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் மகளிர் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் பாகிஸ்தானுக்குரிய ஆட்டங்களை நேபாளம் அல்லது இலங்கையில் நடத்துவது என்று முல்தானில் நடந்த உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

___________________________________________________________________________

இந்திய அணியை புகழ்ந்த லியோன்

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நாளை (6-ம் தேதி) தொடங்குகிறது.

இந்நிலையில், இந்த போட்டி தொடர்பாக ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் கூறியதாவது, நான் இந்திய அணியை சூப்பர் ஸ்டார்கள் நிறைந்து குழுவாகப் பார்க்கிறேன். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு, வெற்றிக்கு முழு அணியும் சிறப்பாக செயல்பட வேண்டும். "இந்திய அணியில் நாங்கள் எந்த ஒரு வீரரின் மீது மட்டும் செலுத்த மாட்டோம். நாங்கள் இந்த போட்டியில் எங்களது சிறந்த விளையாட்டை விளையாடுவோம் . கடுமையாக போட்டியிடுவோம். ஒரு தரமான அணிக்கு எதிராக நாங்கள் கடுமையாக போட்டியிடுவோம். என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து