முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சம்பல் செல்ல அனுமதி மறுத்தது எதிர்க்கட்சி தலைவரின் உரிமைக்கு எதிரானது: ராகுல் காந்தி ஆவேசம்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      இந்தியா
Rahul 2024-12-04

காசியாபாத், சம்பல் செல்ல அனுமதி மறுத்தது மக்களவை எதிர்க்கட்சி தலைவரின் உரிமைக்கு எதிரானது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், சம்பலுக்கு போலீஸாருடன் நான் மட்டும் செல்லத் தயார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பலுக்கு மக்களவை எதிக்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் புதன்கிழமை சென்றனர். காலையில் டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர்கள், உத்தரப் பிரதேசம் செல்லும் வழியில் காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். முன்னதாக அவர்கள் சம்பலுக்கு செல்வதைத் தடுத்து நிறுத்தும் வகையில், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு, சாலையில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. எம்பிகள் தடுத்தநிறுத்தப்பட்ட பின்பு வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்ற ராகுல் காந்தி போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், அவர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நாங்கள் சம்பலுக்கு செல்வதற்கு முயன்றோம், போலீஸார் அனுமதி மறுக்கிறார்கள். மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக அங்கு செல்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அவர்கள் என்னைத் தடுத்து நிறுத்துகிறார்கள். நான் போலீஸாருடன் தனியாக அங்கு செல்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்கள் அதனையும் ஏற்கவில்லை.

இன்னும் சில நாட்களுக்குப் பின்பு நாங்கள் வந்தால் அப்போது அவர்கள் எங்களை அங்கு செல்ல அனுமதிப்பதாக கூறுகிறார்கள். இது மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் உரிமைக்கு எதிரானது, அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது. நாங்கள் அமைதியாக சம்பலுக்குச் சென்று அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கவும், அங்குள்ள மக்களைச் சந்திக்கவும் விரும்புகிறோம்.

அரசியலமைப்புச் சட்டம் எனக்கு வழங்கியிருக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. இதுதான் புதிய இந்தியா, அரசிலமைப்புச் சட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் இந்தியா, அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் இந்தியா. அதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து