முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கடற்படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      இந்தியா
Modi 2024-12-04

Source: provided

புது டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதியை கடற்படை தினமாக இந்தியா கொண்டாடுகிறது. 1971-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின் போது இந்திய கடற்படை ஆற்றிய சிறந்த பங்கை அங்கீகரிப்பதற்காகவும், ஆபரேஷன் ட்ரைடென்ட் போர் நடவடிக்கையின் சாதனைகளை நினைவுகூரவும் கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.

கடற்படை தினத்தை முன்னிட்டு  நாட்டின் பாதுகாப்பு, மற்றும் செழிப்பை உறுதி செய்யும்  இந்திய கடற்படை வீரர்களின் அர்ப்பணிப்புக்காக பிரதமர்  மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர்  மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள  பதிவில் கூறியிருப்பதாவது,

இந்திய கடற்படை தினத்தில், ஈடு இணையற்ற தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் நமது கடற்பரப்பை காக்கும் வீரம் மிக்க வீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். 

அவர்களின் அர்ப்பணிப்பு நமது தேசத்தின் பாதுகாப்பு, மற்றும் செழுமையை உறுதி செய்கிறது. இந்தியாவின் வளமான கடல் வரலாற்றைக் கண்டு பெருமிதம் கொள்கிறோம். இவ்வறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து