முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 32,240 கன அடியாக அதிகரிப்பு

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      தமிழகம்
mettur 2024-12-03

Source: provided

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,240 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.82 அடி உயர்ந்தது.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டு இருந்தது.  பெஞ்சல் புயல் காரணமாக, காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாகவும், தொப்பையாறு அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 3-ம் தேதி காலை முதல் அதிகரித்தது. 

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 9,246 கன அடியாகவும், நேற்று முன்தினம் இரவு 29,021 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று (டிச.4) காலை 32,240 கன அடியாக அதிகரித்தது.  அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1,000 கன அடி நீர், கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 

அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 111.39 அடியில் இருந்து 113.21 அடியாகவும், நீர் இருப்பு 80.40 டி.எம்.சி.யில் இருந்து 83.05 டி.எம்.சி.யாகவும் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.82 அடி, நீர் இருப்பு 2.65 டி.எம்.சி. உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து