முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் நிவாரண நிதியை நான்கு மடங்கு உயர்த்தி வழங்க அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      தமிழகம்
OPS 2023-10-25

சென்னை, முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புயல் நிவாரண உதவிகளை நான்கு மடங்கு உயர்த்திக் கொடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஃபெஞ்சல் புயலை சரியாக திமுக அரசு எதிர்கொள்ளவில்லை என்பதும், திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக பல கிராமங்கள் இன்னமும் வெள்ளநீரில் தத்தளிக்கிறது என்பதும், பெரும்பாலான கிராமங்களுக்கு அரசு எவ்வித உதவியும் செய்யவில்லை என்பதும், பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களை முகாம்களுக்கு கூட அழைத்துச் செல்ல முடியாத அரசாக திமுக அரசு விளங்குகிறது என்பதும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயலால் தற்போது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மழையால் உயிரிழந்த மாடுகளுக்கு 40,000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

தான் அளித்த வாக்குறுதியையும் கண்டு கொள்ளாமல், முந்தைய நேர்வுகளில், 10 ஆண்டுகள், 15 ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது வழங்கப்பட்ட நிவாரணங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அண்டை மாநிலமான புதுச்சேரியில் தற்போது என்ன வழங்கப்பட்டுள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளாமல், தற்போதைய விலைவாசியை ஆராயாமல், மத்திய அரசின் வரையறையை மட்டுமே கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்டுள்ள மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2015 ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது. 03-12-2015 அன்று பிரதமரை நேரில் பார்வையிட வைத்து, உடனடியாக 1000 கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதவின் ஆளுமைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இதுபோன்ற நடவடிக்கையினைத்தான் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் மேற்கூறியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவிகளை நான்கு மடங்கு உயர்த்திக் கொடுத்திடவும், ஆங்காங்கே தேங்கியுள்ள நீரை விரைந்து அகற்றி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் பணிகளை மேற்கொள்ளயும் மத்திய அரசிடமிருந்து தேவையான நிதியை சாதூர்யமான முறையில் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து