முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அண்ணாமலைக்கு திருமாவளவன் கேள்வி

திங்கட்கிழமை, 9 டிசம்பர் 2024      தமிழகம்      அரசியல்
Thirumavalavan 2023-09-26

சென்னை, பா.ஜ.க. அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை நந்தனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா திமுக குறித்து பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, கட்சி நலன்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டதால் விடுதலை சிறுத்தைகள் துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்டு செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று அறிவித்தார்.

முன்னதாக, ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு குறித்து கோவையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, திருமாவளவன் கட்டுப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை. விசிக யார் கையில் உள்ளது? திருமாவளவன் கையில் உள்ளதா? அல்லது துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கையில் உள்ளதா?. திருமாவளவன் செல்லாத நிகழ்ச்சிக்கு அவரது கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா எப்படி சென்றார்?. விசிகவிற்கு ஒரு தலைமையா? அல்லது இரண்டு தலைமயா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், விசிக திருமாவளவன் கையில் உள்ளதா?; ஆதவ் அர்ஜூனா கையில் உள்ளதா? என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த திருமாவளவன், பா.ஜ.க. அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா?; மோடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்பதை அண்ணாமலை சொல்லட்டும். அதற்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி யார் கையில் உள்ளது என்பதற்கு நான் பதில் சொல்கிறேன்' என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து