முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் பயணமாக வரும் 15-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் ஜனாதிபதி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு

புதன்கிழமை, 11 டிசம்பர் 2024      உலகம்
Anura-Kumara-Dissanayake-20

கொழும்பு, 2 நாள் பயணமாக வரும் 15-ம் தேதி இந்தியாவுக்கு இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக வருகை  தரவுள்ளார். அப்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி  ஆகியோரை திசநாயக சந்தித்து பேசவுள்ளார். 

கடந்த செப்டம்பரில் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்று புதிய அதிபராகப் பதவியேற்றார். 

இதைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் சுகாதாரத் துறை அமைச்சரும்,  அமைச்சரவை செய்தித் தொடர்பாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ செய்தியாளர்களிடம்  கூறுகையில்,

அதிபர் அனுர குமார திசநாயக வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை, 2 நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை அவர் சந்திக்க உள்ளார். அவருடன் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இணை அமைச்சர் அனில் ஜயந்த பொனாண்டோ ஆகியோரும் செல்ல உள்ளனர் என்றார்.

இந்தச் சந்திப்பின் போது இருநாடுகள் இடையே நிலவும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும். எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இலங்கை அதிபராக அனுர குமார திசநாயக பதவியேற்ற பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து