முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை : அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல்

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      இந்தியா
Kejriwal 2024-02-17

Source: provided

லூதியானா : ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் குர்பிரீத் கோகி பஸ்ஸி. லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இவரது மறைவுக்க அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி இணை காவல் ஆணையாளர் ஜஸ்கரன் சிங் தேஜா கூறும்போது, துப்பாக்கி குண்டு காயங்களுடன் கோகி கிடந்துள்ளார். அவர் டி.எம்.சி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர் என்றார்.  இதுபற்றி தகவல் அறிந்ததும், காவல் ஆணையாளர் குல்தீப் சஹால் மற்றும் காவல் துணை ஆணையாளர் ஜிதேந்திரா ஜோர்வால் ஆகியோரும் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். கோகிக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். 2 முறை கவுன்சிலராக இருந்த கோகி, 2022-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வானார்.

இதற்கிடையே குர்பிரீத் கோகி பஸ்ஸி மறைவுக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  லூதியானாவின் எம்.எல்.ஏ. குர்பிரீத் கோகி பஸ்ஸியின் அகால மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். தனது மக்களுக்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் இரக்கத்துடன் சேவை செய்த ஒரு தலைவர், அவரது மறைவு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். 

இந்த கடினமான நேரத்தில் துக்கத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. அவர்கள் வலிமையையும் ஆறுதலையும் பெறட்டும். இந்த ஆழ்ந்த இழப்பின் தருணத்தில் அவரது குடும்பத்தினருடனும் லூதியானா மக்களுடனும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். அவரது சேவை மரபு எப்போதும் நினைவுகூறப்படும் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து