Idhayam Matrimony

தமிழகத்தின் இருண்ட காலம்: தி.மு.க. ஆட்சி மீது ஓ.பி.எஸ். விமர்சனம்

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      தமிழகம்
OPS 2023-10-25

Source: provided

சென்னை : கடந்த 42 மாத காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என்று சொல்லும் அளவுக்கு ஒரு மோசமான ஆட்சியாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டை விடியலை நோக்கி அழைத்துச் சொல்கிறோம் என்றுகூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 42 மாத காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என்று சொல்லும் அளவுக்கு ஒரு மோசமான ஆட்சியாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.  ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்றால், அந்த நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும், இளைஞர்கள் அறிவுத் திறன் உயர்த்தப்பட வேண்டும், ஆனால், கடந்த 42 மாத கால தி.மு.க. ஆட்சியில், போதைப் பொருட்களின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

 தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து, போதைப் பொருட்களின் நடமாட்டம் கொடிகட்டி பறக்கின்ற நிலையில், தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தனியார் நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.  உயர் கல்வியை எடுத்துக் கொண்டால், கடந்த 42 மாத காலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட திறக்கப்படவில்லை.  அரசுத் துறைகளில் உள்ள  மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களில் முப்பத்தைந்தாயிரம் காலிப் பணியிடங்களை மட்டுமே தி.மு.க. அரசு கடந்த 42 மாதங்களில் நிரப்பியுள்ளது.

ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அனைத்து வரிகளை உயர்த்தியும், மக்கள்மீது கூடுதல் நிதிச் சுமையை திணித்தும், நிதி இல்லை என்று சொல்லக்கூடிய திறமையற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழ்நாட்டில் ஒரு கொடுங்கோலாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் இருண்ட கால ஆட்சியை, பொற்கால ஆட்சியாக மாற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் நின்று அடுத்தத் தேர்தலில் ஜனநாயகத்தின் மூலம் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து