Idhayam Matrimony

மகா கும்பமேளாவை முன்னிட்டு நெல்லையில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      தமிழகம்
Vande-Bharat-train 2024-03-

Source: provided

சென்னை : மகா கும்பமேளாவை முன்னிட்டு நெல்லையில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  இந்திய ரெயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் இயக்கப்பட உள்ளது. இது மகா கும்பம் - 2025 என்ற பெயரில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு சுற்றுலா ரெயில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நெல்லையில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு புறப்பட்டு தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக விஜயவாடா வழியாக 7-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு பனாரஸ் சென்றடைகிறது. இதையடுத்து 8,9,10-ந்தேதிகளில் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு செல்கின்றது.

இதை தொடர்ந்து 10-ந்தேதி அயோத்தியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு 13-ந்தேதி நெல்லை வந்தடைகிறது. இதில் ஒரு 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி, மூன்று 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், 7 படுக்கை வசதி பெட்டிகள், 1 பேட்டரி கார், 2 பவர் கார்கள் என் மொத்தம் 14 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. மேலும் www.irctctourism.com என்ற இணையதள முகவரி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து