முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை-தூத்துக்குடி ரெயில் திட்டத்திற்கு நிலம் எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் சிவசங்கர்

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      தமிழகம்
Sivashankar 2023-05-08

சென்னை, மதுரை-தூத்துக்குடி ரெயில் திட்ட நில எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மத்திய ரெயில்வே அமைச்சர்  அஷ்வினி வைஷ்ணவ் கடந்த 10-ந் தேதி அளித்த பேட்டியில், அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரியிருந்ததால், இந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறியதாக செய்தி வெளியாகியிருந்தது. இதற்கு  நான் விரிவான மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளேன்.

இந்நிலையில், தெற்கு ரெயில்வே  விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஜனவரி 10-ம்  தேதி அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர்கள் மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்டம் குறித்து கேட்டபோது, அங்கு நிலவிய இரைச்சலான சூழ்நிலை காரணமாக  தனுஷ்கோடி பாதை திட்டம், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் கைவிடப்பட்டது குறித்து அளித்த பதிலை மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்டத்துக்கான பதில் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், மதுரை-தூத்துக்குடி திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் நிலம் சம்பந்தமாக எந்த ஒரு பிரச்சினையும் இல்லை" என ரெயில்வே அமைச்சர் விளக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டமாகும். எனவே இந்த திட்டத்துக்கு தேவையான நில எடுப்பு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இதற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்து, இந்த திட்டத்தினை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து