முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - இந்தோனேசியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடில்லி : இந்தோனேசியா - இந்தியா இடையே பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் விதமாக பிரதமர் மோடியை இந்தோனேசிய அதிபர் நேற்று சந்தித்தார். இதில் இந்தியா-இந்தோனேசியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் ற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக குற்றத் தடுப்பு, தேடுதல் மற்றும் மீட்பு, திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்தோனேசியா - இந்தியா இடையே ஒப்பந்தம்  கையெழுத்தானது.

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்தோனேசியாவை முக்கிய பங்குதாரராகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, "சர்வதேச சட்டத்திற்குட்பட்டு கடல்வழிப் போக்குவரத்து சுதந்திரமாக செயல்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்’ என தெரிவித்தார். மேலும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு இந்த விவகாரத்தில் உலகளாவிய நாடுகளின் அக்கறை குறித்தும் அவர் பேசினார். 

இந்தியாவும் இந்தோனேசியாவும் பாதுகாப்பு, உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளில் கூட்டாகச் செயல்பட ஒப்புக் கொண்டுள்ள நிலையில், "எங்கள் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து நாங்கள் விரிவான விவாதங்களை நடத்தினோம். நிதிசார் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, இணையம் சார்ந்த விஷயங்கள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதில், கடல்சார் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, தீவிரவாத ஒழிப்பு ஆகியவற்றிற்கு இரு தரப்பினரும் முக்கியத்துவம் அளித்துள்ளோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து