முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நல்லாட்சியை மறுவரையறை செய்யும் ஆற்றல்மிக்க திட்டம்: ஜனாதிபதி முர்மு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2025      இந்தியா
Murmu 2024-04-10

Source: provided

சென்னை : ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’  திட்டம் நல்லாட்சியை மறுவரையறை செய்யும் ஆற்றல்மிக்க திட்டம் என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.

நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிட்டு, அவர் ஆற்றிய உரை வருமாறு:

75 ஆண்டுகளுக்கு முன், ஜனவரி 26-ஆம் தேதி நாட்டின் அடிப்படை ஆவணமான இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. நாடு சுதந்திரம் அடைந்தபோது, பல பகுதிகள் கடுமையான வறுமை மற்றும் பட்டினியின் பிடியில் சிக்கியிருந்தன. அந்நிய ஆட்சியாளர்களால் ஏற்பட்ட இடர்ப்பாடுகளில் இருந்து நாட்டை விடுவிக்க பெரும் தியாகங்களைச் செய்த துணிச்சல்மிக்க மாமனிதர்களை நாம் நினைவுகூர வேண்டும்.

அண்மை ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  துணிச்சலான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களால் எதிர்வரும் ஆண்டுகளிலும் இதே நிலை தொடரும்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கிறது. பிரதமரின் மக்கள் நிதித் திட்டம், ஆயுள் காப்பீட்டுத் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், முத்ரா திட்டம், புத்தாக்க இந்தியா, அடல் ஓய்வூதியத் திட்டம் போன்ற முன்னெடுப்புகள் விரிவுபடுத்தப்பட்டு, அனைவருக்கும் வளமான எதிர்காலம் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாடு 1947-இல் சுதந்திரம் பெற்ற நிலையில், காலனித்துவ மனநிலை நம்மிடையே நீண்ட காலம் நீடித்தது. அண்மைக் காலமாக, அந்த மனநிலையை மாற்ற ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக, பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் ஆகியவற்றை அமல்படுத்திய முடிவு அத்தகைய முயற்சிகளில் குறிப்பிடத்தக்கதாகும்.  

நமது பாரம்பரிய வளத்தின் வெளிப்பாடாக மகா கும்பமேளா திகழ்கிறது . இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, கல்வித் துறையில் அரசு தனது முதலீட்டை அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தரமான கற்றல், உள்கட்டமைப்பு, எண்ம (டிஜிட்டல்) உள்ளடக்கம், தாய்மொழி வழிக் கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் கல்வித் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)  இம்மாதம் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டு, தேசத்தை மீண்டும் பெருமைப்படுத்தியது. இந்தத் திறனைக் கொண்ட உலகின் நான்காவது நாடாக இந்தியா விளங்குகிறது. ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தினர். 2024 -ஆம் ஆண்டில் உலகின் இளம் சதுரங்க சாம்பியனாக டி.குகேஷ் சாதனை படைத்தார்.  இவ்வாறு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து