முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரீன்லாந்து தீவு விவகாரம்: அமெரிக்கவிடம் டென்மார்க் திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2025      உலகம்
Tirmu 2025-01-26

Source: provided

வாஷிங்டன் : கிரீன்லாந்து தீவு விற்பனைக்கு அல்ல என்று அமெரிக்க அதிபரிடம் திட்டவட்டமாக கூறிவிட்டது.

டென்மார்க்கின் ஓர் அங்கமாக தன்னாட்சி பெற்ற பிராந்தியமாகத் திகழும் கிரீன்லாந்து தீவை, விலைக்கு வாங்கப்போவதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அமெரிக்க் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இந்த நிலையில், மேற்கண்ட இவ்விரு தலைவர் களுக்குமிடையிலான தொலைபேசி உரையாடலின்போது, அமெரிக்க தேசியத்தின் பாதுகாப்புக்காக ஆர்க்டிக் பிராந்தியமான கிரீன்லாந்தின் முக்கியத்துவம் குறித்து டென்மார்க் பிரதமரிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துரைத்ததாக ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலின்போது, கிரீன்லாந்து விவகாரத்தில் ராணுவ தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரந்தளவிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த டென்மார்க் தயாராக இருப்பதாக டொனல்ட் டிரம்ப்பிடம் பிரதமர் மெட்டே ப்ரெடெரிக்சென் எடுத்துக் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், டென்மார்க்கின் வாதத்தை ஏற்க டொனால்ட் டிரம்ப் மறுத்துவிட்டதாக இவ்விவகாரத்தை நன்கறிந்த அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிரீன்லாந்து தீவை அமெரிக்காவின் கட்டுப்பட்டுக்குள் கொண்டு வர அமெரிக்காவின் 47-வது அதிபராக கடந்த 20-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப் முனைப்பு காட்டி வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இந்த நிலையில், டென்மார்க் பிரதமரை மிரட்டும்தொனியில் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் பேசியிருப்பதாக ஐரோப்பிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தக் கட்டமாக, ரஷிய அதிபர் விளாடிமீர் புதினுடன் டொனால்ட் டிரம்ப் பேச்சுவர்த்தை நடத்த ஆயத்தமாகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ரஷியாவிடம் வலியுறுத்தி உக்ரைனில் மீண்டும் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து