முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மான்செஸ்டர் யுனைடெட் பயிற்சி மையம்?

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2025      விளையாட்டு
Miyam 2025-01-26

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் ‘மான்செஸ்டர் யுனைடெட்’ பயிற்சி மையம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிகப்பெரிய ரசிகர்... 

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராபோர்ட் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப், இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடுகிறது. உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பிற்கு, இந்தியாவில் மட்டும் சுமார் 3.5 கோடி ரசிகர்கள் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் முதல்...

இந்த நிலையில், 'மான்செஸ்டர் யுனைடெட்' கால்பந்து கிளப், முதல் முறையாக இந்தியாவில் தனது பயிற்சி மையத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இந்த பயிற்சி மையம் அமைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) ஆண்டுக் கூட்டத்தில், சென்னையில் கால்பந்து பயிற்சி மையம் அமைப்பது குறித்து மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் உயர் அதிகாரிகள் குழுவினரோடு தமிழ்நாடு தொழில்துறை அதிகாரிகள் விவாதித்தனர்.

பெண்களுக்கு....

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் கால்பந்து பயிற்சி மையத்தை, குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கால்பந்து பயிற்சி மையத்தை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து