முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்பு மனு தொடர்பான வழக்கு: இ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2025      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

புதுடெல்லி : வேட்பு மனு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீ்ட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று  விசாரணை நடைபெறுகிறது.

தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உள்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்ததாக கூறி, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதை விசாரித்த கோர்ட்டு, இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படி, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை சென்னை ஐகோர்ட்டு கடந்த 22-ந்தேதி தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி, எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று  (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து