முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தினத்தை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறிக் கொண்ட இந்தியா-வங்கதேச ராணுவத்தினர்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2025      இந்தியா
Army 2025-01-26

Source: provided

புதுடெல்லி : குடியரசு தினத்தை முன்னிட்டு எல்லையில் இனிப்புகளை இந்தியா-வங்காளதேச ராணுவத்தினர் பரிமாறிக் கொண்டனர். 

நாட்டின் 76-வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டு வருகிறது. 76-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். பின்னர் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தியா-வங்காளதேச எல்லையில் இருநாட்டு ராணுவங்களை சேர்ந்த அதிகாரிகள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி அருகே எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வங்காளதேச ராணுவத்தினருடன் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு வங்காளதேச ராணுவத்தினர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இதே போல், டார்ஜீலிங்கில் உள்ள பனிடங்கி பகுதியில், இந்தியா-நேபாள எல்லை அருகே மத்திய காவல்படையின் எஸ்.எஸ்.பி. படையை சேர்ந்த அதிகாரிகள், நேபாள போலீசாருடன் இனிப்புகளை பரிமாறி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து