முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மருத்துவமனை அதிகாரிகளின் செயல் மனிதாபிமானமற்றது: ஓ.பி.எஸ்.

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      தமிழகம்
OPS 2023-10-25

Source: provided

சென்னை : இறக்கும் தருவாயில் இருக்கும் நோயாளியை மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதித்தது மனிதாபிமானமற்ற செயல் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவகாமியம்மாள் என்பவர் இறக்கும் தருவாயில் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், மருத்துவமனையிலிருந்து வெளிவந்த பிறகு அவர் இறந்துவிட்டதாகவும், அவருடைய மகன் பாலன் தாயின் உடலை சைக்கிளில் கட்டி 18 கிலோ மீட்டர் தள்ளிச் சென்றதாகவும்   ஊடகங்களில் வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு நோயாளியை மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதித்தது மருத்துவமனை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரும்பாலும் ஏழையெளிய மக்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து