முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டி-20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டன் : 4 இந்திய வீரர்களுக்கு இடம்

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      விளையாட்டு
INDIA 2024-10-23

Source: provided

துபாய் : 2024-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் டி-20 அணியில் 4 இந்தியர்கள் தேர்வாகியுள்ளார்கள். இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

4 இந்தியர்கள்...

ஐ.சி.சி. வெளியிட்டுள்ள இந்த டி20 அணியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, பேட்டர் ரோகித் சர்மா ஆகிய நால்வரும் இடம் பெற்றுள்ளனர். இதில் கேப்டனாக ரோகித் சர்மா இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 4 இந்தியர்கள், மற்ற 7 வீரர்கள் முறையே ஆஸி, இங்கிலாந்து, பாகிஸ்தான், மே.இ.தீ., ஜிம்பாப்வே, இங்கிலாந்து, இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் அடங்கும். இதேபோல் டெஸ்ட்டில் கம்மின்ஸ் கேப்டனாகவும் ஒருநாள் போட்டிகளில் சரிதா அசலங்காவும் தேர்வாகியிருந்தார்கள். ஐ.சி.சி. வெளியிட்ட ஒருநாள் அணியில் இந்திய வீரர்கள் யாருமே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் அணியில் ஜெய்ஸ்வால், பும்ரா, ஜடேஜா தேர்வாகியிருந்தார்கள்.

ஐ.சி.சி. டி20 அணி

ரோகித் சர்மா (கேப்டன்), டிராவிஸ் ஹெட், பிலிப் சால்ட், பாபர் அசாம், நிகோலஸ் பூரன் (கீப்பர்), சிக்கந்தர் ராஸா, ஹார்திக் பாண்டியா, ரஷித் கான், வனிந்து ஹசரங்கா, ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து