முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

76-வது குடியரசு நாள்: டெல்லியில் தேசியக்கொடியை ஏற்றினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2025      இந்தியா
Murmu 2025-01-26

Source: provided

புதுடெல்லி : குடியரசு நாளையொட்டி டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். கடமைப்பாதையில் நடந்த முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் கலந்து கொண்டார்.

நாடு முழுவதும் குடியரசு நாள் விழா நேற்று (ஜன. 26) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிய நிலையில், புது டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக போர் நினைவுச் சின்னத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர் கொடியேற்றுவதற்காக குதிரைகள் பூட்டிய வாகனத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியந்தொவும் சாரட் வண்டியில் கடமைப்பாதைக்கு வந்தனர்.அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோவுக்கு முப்படை தளபதிகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார். 

நிகழாண்டு குடியரசு நாள், அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் (பவள விழா) நிறைவுபெற்றதைக் குறிக்கும் வகையிலும் கொண்டாடப்படப்பட்டு வருகிறது. அதற்காக, ‘ஸ்வா்ணிம் பாரதம்: விராசத் ஔா் விகாஸ்’ அதாவது ‘தங்க பாரதம்: பாரம்பரியமும் மேம்பாடும்’ என்ற கருப்பொருளில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 16 அலங்கார ஊா்திகள் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவற்றோடு, மத்திய அமைச்சகங்கள், பல்வேறு துறைகளின் 15 அலங்கார ஊா்திகளும் இடம்பெற உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து