முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. மகா கும்பமேளாவில் அமித்ஷா இன்று புனித நீராடல்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2025      இந்தியா
Amit-Shah 2023-11-26

Source: provided

பிரயாக்ராஜ் : பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புனித நீராடவுள்ளார்.

இதுகுறித்து மகா கும்பமேளா நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது, அமித் ஷா திங்கள்கிழமை காலை 11:25 மணிக்கு பிரயாக்ராஜுக்கு வருகை தருகிறார். தொடர்ந்து அவர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார். பின்னர் அவர் படே ஹனுமான் ஜி கோயில் மற்றும் அபய்வத்தை பார்வையிடுவார். பின்னர், ஜூனா அகாராவுக்குச் சென்று மதிய உணவு சாப்பிடுவார்.

அவரது அட்டவணையில் குரு சரணானந்த் ஜியின் ஆசிரமத்திற்குச் செல்வதும் அடங்கும். அங்கு அவர் குரு சரணானந்த் ஜி மற்றும் கோவிந்த் கிரி ஜி மகராஜ் ஆகியோரைச் சந்திக்கிறார். மாலையில் பிரயாக்ராஜில் இருந்து அமித்ஷா டில்லி புறப்பட்டு செல்வார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக சங்கமமாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி (பெளஷ பெளா்ணமி) தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா்.

மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 26 வரை நடைபெறும் மகா கும்பமேளாவில் மொத்தம் 40 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தா்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்தை நிா்வகிக்க மாநில அரசு சாா்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மகா கும்பமேளாவில் ரஷியா, உக்ரைன் உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்களும், பிப்.1-ஆம் தேதி புனித நீராடவுள்ளனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து