முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனநாயகத்தை ஆளுங்கட்சி தொடர்ந்து சிதைத்து வருகிறது : மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2025      இந்தியா
Malligarjuna 2023-07-27

Source: provided

 புதுடில்லி : கடந்த பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டுள்ள நமது ஜனநாயக நிறுவனங்களை ஆளுங்கட்சி தொடர்ந்து சிதைத்து வருகிறது என்று  மல்லிகார்ஜூன கார்கே  குற்றம் சாட்டியுள்ளார். 

குடியரசு நாள் விழா நேற்று (ஜன. 26) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘நமது அரசமைப்பின் மீது தொடர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருவதை வெளிக்காட்டுவதற்கான நேரமும் இதுதான். கடந்த பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டுள்ள நமது ஜனநாயக நிறுவனங்களை ஆளுங்கட்சி தொடர்ந்து சிதைத்து வருகிறது.

சுயாட்சி நிறுவனங்கள் மீது அரசியல் தலையீடு இருப்பது வாடிக்கையாகிவிட்டது. அந்நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தின் மீது அரசு கட்டுப்பாடுகளை விதிப்பது அதிகார தலையீடாக மாறிவிட்டது. தேசத்தின் ஒருமைப்பாடு அனுதினமும் சிதைக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் உரிமைகள் ஒடுக்கப்படுகின்றன. ஆளுங்கட்சியின் சர்வாதிகார போக்கால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பெருத்த பின்னடைவை சந்திக்கின்றன.

கடந்த பத்தாண்டுகளாக, ‘மதம் சார் அடிப்படைவாதத்தின்கீழ் வேரூன்றியதொரு வெறுப்பு பிரசாரமானது’, நமது சமுதாயத்தில் பிரிவினை உண்டாக்க காலூன்றியுள்ளது. சிறுபான்மையினர் குறிவைக்கப்படுகிறார்கள். மதச்சார்பின்மைவாதிகள் நாஸிச பிரசாரத்தால் களங்கப்படுத்தப்படுகிறார்கள்.

எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள்.  நம் நாடு பொருளாதார நிலைத்தன்மையற்றதொரு சகாப்தத்தில் உள்ளது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவும், விதிக்கப்படும் வரிகளால் பெருமளவில் சுரண்டப்படுகின்றன.  

ஆகவே, என் சக குடிமக்களே, ‘நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ ஆகிய அரசமைப்பின் சித்தாந்தங்களை பாதுகாப்பதற்கான சரியான நேரம் இதுவே. அரசமைப்பை காப்பதற்காக எந்தவித தியாகத்தையும் செய்ய தயாராகுங்கள். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட்டுள்ளார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து