முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஊழியர்கள் வாரத்துக்கு சராசரியாக 42 மணிநேரம் வேலை : மத்திய அரசின் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

டெல்லி : இந்திய ஊழியர்கள்  வாரத்துக்கு சராசரியாக 42 மணிநேரம் வேலை செய்வதாக மத்திய அரசின் அறிவித்துள்ளது.

இந்திய ஊழியர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் 7 மணிநேரம் வேலை செய்வதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை கூறுகிறது. ஊழியர்கள், நாளுக்கு சராசரியாக 422 நிமிடங்கள் வரையில் (7 மணிநேரம்) வேலை செய்கின்றனர்.

வியட்நாம், சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ் முதலான வளர்ந்து வரும் நாடுகளிலும் ஊழியர்கள் வாரத்துக்கு 33 முதல் 48 மணிநேரமே வேலை செய்கின்றனர். இருப்பினும், இவற்றில் சில நாடுகளில் வேலை நாள்கள் 5-ஆகக் குறைக்கப்பட்டு, வேலை நேரம் 8 மணிநேரம்வரையில் இருக்கும்.

இதனிடையே, நாடு முன்னேற வாரத்துக்கு 70 மணிநேரம்வரையில் வேலை செய்ய வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவன இணை நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியதும், அமெரிக்காவைப்போல பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால், சீனாவைப்போல வாரத்துக்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் கூறியதும் இந்திய நிறுவனங்களின் பணியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து