முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை வீரருக்கு ஐ.சி.சி. விருது

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2025      விளையாட்டு
ICC 2023 08 04

Source: provided

ஐ.சி.சி.யின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார். கடந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களில் ஒருவருக்கு ஐ.சி.சி.யின் சார்பில், வளர்ந்து வரும் வீரருக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை இலங்கை அணியின் இளம் வீரரான கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார்.

அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து கமிந்து மெண்டிஸ் கடந்த ஆண்டில் மட்டும் 1,451 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 50-க்கும் சற்று அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டுக்கு முன்பாக இலங்கை அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியிருந்த கமிந்து மெண்டிஸ், தற்போது இலங்கை அணியில் தனக்கென அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

நடுவரிசை ஆட்டக்காரரான கமிந்து மெண்டிஸ் கடந்த ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,049 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 74.92 ஆக உள்ளது. கடந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் நடுவரிசை ஆட்டக்காரர்கள் 6 பேர் 1000-க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளனர். அதில் கமிந்து மெண்டிஸும் ஒருவர். கடந்த ஆண்டில் மட்டும் கமிந்து மெண்டிஸ் 5 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த வீரர்களில் ஒருவராகவும் அவர் மாறினார்.

________________________________________________________________________

பார்ல் ராயல்ஸ் அரிய சாதனை  

தென் ஆப்பிரிக்க உள்ளூர் டி20 தொடரான எஸ்.ஏ. லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 78 ரன்கள் அடித்தார்.

பின்னர் 141 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் வெற்றி பெற்றது. அத்துடன் பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் 20 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீசினர். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 20 ஓவர்களையும் சுழற்பந்தாக வீசிய முதல் அணி என்ற அரிய சாதனையை பார்ல் ராயல்ஸ் படைத்துள்ளது.

________________________________________________________________________

ஜோப்ரா ஆர்ச்சரை குறிவைத்தது ஏன்? திலக் வர்மா பதில்!

இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராக அதிரடியாக விளையாடியது ஏன் என்பது குறித்து திலக் வர்மா பேசியுள்ளார்.

________________________________________________________________________

திலக் வர்மா அபாரம்

இங்கிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சாளருக்கு எதிராக அதிரடியாக விளையாட விரும்பினேன். சிறந்த பந்துவீச்சாளருக்கு எதிராக அதிரடியாக விளையாடினால், மற்ற பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் ஏற்படும். அதனால், வீரர்கள் மறுமுனையில் விக்கெட்டுகளை இழந்த போதிலும், இங்கிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாட விரும்பினேன். நான் அதிரடியாக விளையாடுவது மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட உதவியாக இருக்கும்.

ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக நான் விளையாடிய ஷாட்டுகள் அனைத்தும் வலைப்பயிற்சியின்போது பயிற்சி செய்தவையே. அவருக்கு எதிராக எந்த மாதிரியான ஷாட்டுகளை விளையாட வேண்டும் என்பதற்கு தயாராக இருந்தேன். அதனால், எனக்கு சிறந்த முடிவுகள் கிடைத்தன என்றார். இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 ஓவர்களை வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டாவது டி20 போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் 60 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

________________________________________________________________________

பாகிஸ்தான் வீரர் விலகல்

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அண்மையில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  பீல்டிங்கின் போது, பந்தை தடுக்க முயன்ற சைம் ஆயூபுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அவர் குறைந்தது 6 வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து, அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து சைம் ஆயூப் விலகியுள்ளது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி கூறியதாவது: பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் சைம் ஆயூபுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுடன் தினமும் பேசி வருகிறேன். சைம் ஆயூபின் கணுக்காலில் போடப்பட்டுள்ள கட்டு இன்னும் சில நாள்களில் அகற்றப்பட்டும். ஆனால், அவர் காயத்திலிருந்து குணமடைய நிறைய நாள்கள் தேவைப்படும். அவரது கிரிக்கெட் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலிருந்து அவர் விலகுகிறார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து