முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2025      தமிழகம்
Udayanidhi 2021 12 12

Source: provided

சென்னை : பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,  மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதுக்கு நடிகர் அஜித், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி மற்றும் ஷோபனா சந்திரகுமார் ஆகியோர் தேர்வாகி இருப்பது அறிந்து மகிழ்ந்தோம்.

அதேபோல, பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள கிரிக்கெட் வீரர் சகோதரர் அஸ்வின் ,தாமோதரன், பறையிசை கலைஞர் சகோதரர் வேலு ஆசான், இசைக்கலைஞர் புதுவை தட்சிணாமூர்த்தி, தெருக்கூத்துக் கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன், குருவாயூர் துரை, லக்ஷ்மிபதி ராமசுப்பையர், எ.டி.ஸ்ரீனிவாஸ், ஆர்.ஜி. சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கு என் அன்பையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளோர், அவரவர் துறைகளில் மென்மேலும் சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமைத்தேடித் தர வாழ்த்துகிறோம். என தெரிவித்துள்ளார் . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து