முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்பஸ்தன் விமர்சனம்

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      சினிமா
Kudumbasthan-Review 2025-01

Source: provided

நாயகன் மணிகண்டனும், நாயகி சான்வி மேக்னாவும் காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள். குடும்பஸ்தனாகிவிடும் மணிகண்டனுக்கு பொருளாதார தேவை அதிகரிக்கிறது. குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்துவிட ஓடிக்கொண்டிருக்கும் மணிகண்டன், ஒரு கட்டத்தில் வேலையை இழந்து விடுகிறார். குடும்பத்திற்கு தெரிந்தால் சிக்கலாகிவிடும் என்பதால், குடும்ப செலவுகளை சமாளிக்க கடன் வாங்குகிறார்.  வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வேறு ஒரு இடத்தில் கடன் வாங்குகிறார். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்ற நோக்கத்தில் பயணிக்கும் மணிகண்டன், தனது குடும்பத்தாரின் நடவடிக்கையால் பணம் தான் வாழ்க்கை என்ற மனநிலைக்கு மாறுகிறார் என்பதை நகைச்சுவையாக சொல்வதே குடும்பஸ்தன் படம். தனது உடல் மொழி மற்றும் இயல்பான நடிப்பு மூலம்  படம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறார். நாயகியாக சான்வி மேக்னா அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார். குரு சோமசுந்தரம். ஆர்.சுந்தரராஜன், நிவேதிதா ராஜப்பன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வைசாக்கின் இசையும், பிசன்னா பாலச்சந்திரனின் வசனங்களும் சிறப்பு. இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, குடும்ப தலைவர்களின் கஷ்ட்டங்களை காமெடியாக சொல்லி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார். மொத்தத்தில், ‘குடும்பஸ்தனை பார்க்கலாம் ரசிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து