முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில் வெளியூர் அமைச்சர்கள் தேர்தல் பணி செய்யவில்லை: அமைச்சர் முத்துசாமி

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      தமிழகம்
Muthusamy 2023-07-27

Source: provided

ஈரோடு : ஈரோடு கிழக்கில் வெளியூர் அமைச்சர்கள் யாரும் தேர்தல் பணிசெய்ய வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

ஈரோட்டில் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் நடந்து சென்று மக்களை சந்திப்பது என முடிவு செய்து மொத்தம் 33 வார்டுகளில், 30 வார்டு மக்களை சந்தித்துள்ளோம். மக்கள் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த தேர்தலில் வெளியூர் அமைச்சர்கள் வேண்டாம், உள்ளூர் கட்சிக்காரர்களை வைத்து வேலை செய்ய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால் நாங்கள் வேலை செய்து வருகிறோம். 

மற்ற அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் வரப்போவதில்லை. எந்த அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கி தேர்தல் பணி செய்யவில்லை. இந்தியா கூட்டணி சரியாது அப்படியே இருக்கும். சீமான் மட்டுமல்ல யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. அனைவரையும் நியாயமான மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். வாக்கு கேட்பது மட்டும் முக்கிய நோக்கமல்ல, மக்களின் பிரச்சினையை கேட்பது மிக முக்கியம். அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டமும் தேர்தலுக்காகவும், அரசியலுக்காக என நினைத்தால் அப்படித்தான் இருக்கும். அதனை ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து