முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட்டல் ராதா விமர்சனம்

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      சினிமா
Patal-Radha-Review 2025-01-

Source: provided

மது நாட்டுக்கும் வீட்டிற்கும் தனி மனிதனுக்கும் கேடு மட்டுமல்ல ஒரு  குடும்பத்தின் மகிழ்ச்சியை எப்படி சீர்குலைக்கிறது என்பதை கலகலப்பாகவும், கண் கலங்கும்படியும் சொல்லியிருக்கும் படம் தான் பாட்டல் ராதா. கட்டுமானத் தொழிலாளியான நாயகன் குரு சோமசுந்தரம், மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார், நாயகனின் மதுப்பழக்கத்தினால் எப்படி அழிவை நோக்கி இந்த குடும்பம் பயணிக்கிறது என்பதை எச்சரிக்கும் படமே இந்த பாட்டல் ராதா’. குரு சோமசுந்தரம், தனது எதார்த்தமான நடிப்பால் படம் முழுக்க பட்டையை கிளப்புகிறார். மனைவியாக வரும் சஞ்சனா நடராஜன், குடியால் பாதிக்கப்படும் குடும்பத் தலைவிகளை பிரதிபலிக்கும் விதத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். ஜான் விஜய், மாறன். ஆண்டனி, பாரி இளவழகன், ஆறுமுகவேல் உள்ளிட்ட பலரும் பொருத்தமான தேர்வு. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தை விவரிக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் தினகரன் சிவலிங்கம், பிரச்சாரம் போன்ற ஒரு கதைக்கருவை, தனது திரைக்கதை மூலம் சிரிக்க வைக்கும் படமாக மட்டும் இன்றி சிந்திக்க வைக்கும் நல்ல படைப்பாகவும் கொடுத்திருக்கிறார். மொத்தத்தில், ‘பாட்டல் ராதா’ நிச்சயம் குடும்பமாய் பார்க்க வேண்டிய படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து