முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகியது இந்திய வானிலை மையம் தகவல்

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      தமிழகம்
Wheather 2024-12-09

Source: provided

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகியது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 14-ந்தேதி தொடங்கியது. நாடு முழுவதும் அதிக மாநிலங்களில் மழைப் பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மூலமாக தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள், அணைகள், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பின.

ஃபெஞ்சல் புயல் உருவாகி பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் கடந்து சென்றது. இதனால் தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. பொதுவாக வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை யிலும் ஜனவரி 2-வது வாரம் வரையும் நீடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த வருடம் ஜனவரி மாதம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. பருவ நிலை மாற்றத்தின் காரணமாக கடும் குளிர் பனி இருந்த போதிலும் கூட மழை பெய்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், மாகே, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நேற்று நிறைவு பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து