முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரோவின் 100 செயற்கைக்கோளான ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது : 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      இந்தியா
ISRO PSLV-2024-12-05

Source: provided

ஸ்ரீஹரிகோட்டா : இஸ்ரோ சார்பில் ஜி.எஸ்.எல்.வி., எப். 15 ராக்கெட், நாளை (29-ம் தேதி) காலை 6:23 மணிக்கு, ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ஏவுதளத்தில் இருந்து என்.வி.எஸ்-02 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் ஜனவரி 29ம் தேதி காலை 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைக்கோளை வடிவமைப்பதற்கு, இந்திய தொழில்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்த ராக்கெட், ஜி.பி.எஸ்., சேவை அளிப்பதற்கான என்.வி.எஸ்.,01 என்ற செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தும். ராக்கெட் விண்ணில் ஏவுதலை நேரில் காண விரும்புவோர், https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று (ஜனவரி 28) காலை 5.23 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. ஜி.எஸ்.எல்.வி., எப்15 ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் இஸ்ரோவின் கீழ் செயல்படும் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டது. ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 5.23 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் வரலாறு படைக்க தயாராகி வருகிறது. இந்த மைல்கல் பணி 29-ந்தேதி அதாவது நாளை (புதன்கிழமை) காலை 6.23 மணிக்கு, ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற வழிசெலுத்தும் செயற்கைக்கோள் புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த சாதனை விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியை உயர்த்துகிறது. இது நாட்டில் வளர்ந்து வரும் விண்வெளி திறன்களை வலுப்படுத்துகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து