எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்னோ: உ.பி. மகா கும்பமேளாவில் அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. கடந்த 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இதனிடையே, கும்பமேளா நிகழ்ச்சியில் நேற்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அமாவாசை தினமான நேற்று அதிகாலை திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அதிகாலை 3 மணியளவில் மக்கள் அதிக அளவில் திரண்டபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும், சிலர் கீழே விழுந்தனர். இதனால், கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்களும் விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பலர் மயங்கி விழுந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கும்பமேளா நடைபெறும் பகுதியில் பணியாற்றி வரும் டாக்டர், ஏ.எப்.பி. செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்' என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா? எத்தனைபேர் உயிரிழந்துள்ளனர்? காயமடைந்தோர் எத்தனைபேர்? உள்பட எந்த விவரத்தையும் உத்தரபிரதேச அரசு இதுவரை வெளியிடவில்லை.
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதாக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரயாக்ராஜ் மஹாகும்பத்தில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இதனுடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக, நான் முதல்வர் யோகி ஜியுடன் பேசியுள்ளேன், மேலும் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரயாக்ராஜ் மஹாகும்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்த பக்தர்கள் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 2 days ago |
-
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 25-ஆக உயர்வு : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
29 Jan 2025சென்னை : அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
3-வது டி-20யில் இங்கிலாந்து வெற்றி: தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் : தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
29 Jan 2025ராஜ்கோட் : 3-வது டி-20யில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து தெரிவித்துள
-
சுனிதா வில்லியம்ஸை பத்திரமாக மீட்க எலான் மஸ்கிடம் டிரம்ப் வேண்டுகோள்
29 Jan 2025வாஷிங்டன் : விண்வெளியில் தங்கியுள்ள நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்பேஸ்எக்ஸிடம் வேண்டுகோள்
-
நடிகர் சயீப் அலிகான் வழக்கில் கைதான இளைஞருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
29 Jan 2025மும்பை : சயீப் அலிகான் வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவிட்டுள்ளது.
-
ஈ.சி.ஆர். சம்பவம்: எடப்பாடி பழனிசாமி கேள்வி
29 Jan 2025சென்னை : பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் உரிமை கூட தி.மு.க. ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கலைஞர் கனவு இல்லம் திட்டம்: மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
29 Jan 2025சென்னை : வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் பிரதமரை டிரம்ப் அடுத்த வாரம் சந்திக்கிறார்
29 Jan 2025அமெரிக்கா : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
-
கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு பதில்: அரியானா அனுப்பும் தண்ணீரைதான் நானும் குடிக்கிறேன்: பிரதமர் மோடி
29 Jan 2025புதுடெல்லி : அரியானா அனுப்பும் தண்ணீரையே டெல்லியில் உள்ள பிரதமர் உள்பட அனைவரும் பருகி வருகின்றனர் என விஷம் கலப்பு பற்றிய கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதிலள
-
ஆசிய காது கேளாதோர் போட்டியில் பதக்கம்: தமிழ்நாடு வீரர் வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு
29 Jan 2025சென்னை : ஆசிய காது கேளாதோர் போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
டெல்லி கட்டிட விபத்து: பலி 5 ஆக அதிகரிப்பு
29 Jan 2025புதுடெல்லி : டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
-
தைப்பூச விழாவை முன்னிட்டு பழனி கோவிலுக்கு மாட்டு வண்டிகளில் வந்த பக்தர்கள்
29 Jan 2025பழனி : தைப்பூச விழாவை முன்னிட்டு மாட்டு வண்டியில் வந்த முருக பக்தர்கள்.
-
பெரியார் பற்றி பேச்சு: சீமான் மீது முத்தரசன் குற்றச்சாட்டு
29 Jan 2025ஈரோடு : பெரியாரை பற்றி பேசி சீமான் தன்னை பெரிய தலைவராக காட்டிக்கொள்ள நினைக்கிறார் என்று கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
29 Jan 2025சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிராம் ரூ.7,595க்கும், ஒரு சவரன் ரூ.60,760க்கும் விற்பனையானது.
-
வரும் 6-ம் தேதி திருநெல்வேலி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
29 Jan 2025நெல்லை : வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் நெல்லைச் சீமைக்கு வருகிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட டெல்லி தேர்தலுக்கு காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு
29 Jan 2025புதுடெல்லி : டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ரூ.500 விலையில் எல்பிஜி, பெண்களுக்கு ரூ.2,500 பண மானியம், 100 இந்திரா கேன்டீன்கள் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுத
-
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு தோல்வி நிச்சயம் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேட்டி
29 Jan 2025புதுடெல்லி : டெல்லி சட்டசபை தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவால், அதிஷி இருவருக்கும் தோல்வி நிச்சயம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.
-
திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம் : உ.பி. முதல்வர் வேண்டுகோள்
29 Jan 2025லக்னோ : பிரயாக்ராஜ் வரும் பக்தர்கள் அருகில் உள்ள கங்கை ஆற்றில் நீராடுமாறு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
-
அணுகுண்டு தாக்குதல் நடந்து 80 ஆண்டுகள் நிறைவு: ஜப்பான் செல்கிறார் டிரம்ப்
29 Jan 2025அமெரிக்கா : இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜப்பானில் அணுகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவு பெறுவதினால் அங்கு வருகைத் தருமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு
-
தொடர்ந்து கடும் விமர்சனம்: கவாஸ்கர் மீது பி.சி.சி.ஐ.யிடம் புகார் அளித்த ரோகித் சர்மா
29 Jan 2025மும்பை : இந்திய முன்னாள் வீரர் ஒருவர் மீது பி.சி.சி.ஐ.-யிடம் ரோகித் சர்மா புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஸ்டீவ் ஸ்மித் 35-வது சதம்
29 Jan 2025வார்னே - முரளிதரன் டிராபியில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் காலேயில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
-
தி.மலை கிரிவலப்பாதையில் தர்காவா? அரசு விளக்கம்
29 Jan 2025சென்னை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தர்காவா என்பது குறித்து தமிழக அரச விளக்கம் அளித்துள்ளது.
-
1,250 கிராமப்புற கோவில்களின் திருப்பணிக்கு ரூ.62.50 கோடி நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
29 Jan 2025சென்னை : 1,250 ஆதிதிராவிடர் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளவதற்காக உயர்த்தப்பட்ட நிதியுதவி தலா ரூ.2.50 லட்சம் வீதம் மொத்தம
-
பிப். 1 முதல் ஓலா, உபர் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்
29 Jan 2025சென்னை : ஓலா, உபர் நிறுவனங்களுக்காக ஆட்டோ ஓட்டமால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
-
தமிழகத்தில் ஜி.பி.எஸ். நோய் பாதிப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்
29 Jan 2025சென்னை, : மகாராஷ்டிரத்தில் காணப்படக்கூடிய ஜிபிஎஸ் நோய் பாதிப்பு தமிழ்நாட்டில் வருவதற்கு வாய்ப்பில்லை.
-
பல்லடம் அருகே அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனிதக்கழிவு வீச்சு : காவல்துறையினர் தீவிர விசாரணை
29 Jan 2025பல்லடம் : பல்லடம் அருகே உள்ள அரசு பள்ளி வகுப்பறையில் மனித கழிவு வீசி சென்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.